8 மாநிலங்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட்: வெங்கையா நாயுடு அதிரடி 

 

நேற்று மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் தாக்கல் செய்தபோது அமலியில் ஈடுபட்ட 8 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு அதிரடியாக அறிவித்துள்ளார்

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி, ஆம் ஆத்மி சஞ்சய் சிங் உள்பட 8 மாநிலங்களில் இருந்து ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் அவையின் விதிகளை மீறி அத்துமீறி அமளியில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை என்றும் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார் 

இந்த நிலையில் மக்களவையில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வேளாண் மசோதா நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது திமுக, அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ் , காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன என்பதும் ஒரு கட்டத்தில் சட்ட மசோதா கிழித்து எறியப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் ஒருசில எம்பிக்கள் மட்டும் அத்துமீறி நடந்து உள்ளதை அடுத்து அந்த எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web