8 மாவட்டங்களே உங்களுக்கு எச்சரிக்கை! குறிப்பா மே 21 ,22, 23 தேதிகளில்;

வெப்ப சலனம் காரணமாக அடுத்த  24 மணி நேரத்தில்  8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது!
 
rain

தற்போது தமிழகத்தில் கோடை காலம் நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் இயல்பைவிட அதிகமாக காணப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பாக அரபிக் கடலில் புயல் ஏற்பட்டு அதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்தன. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் சாலையோரங்களில் மழை நீரானது வெள்ளம் போல ஓடியது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு எட்டு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையமானது எச்சரிக்கை விடுத்துள்ளது.weather

அதன்படி தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு அந்த எட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதனை தொடர்ந்து முன்னதாக மழை கொட்டி சாலைகளில் ஓடிய மாவட்டமான நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. திருவண்ணாமலை, தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள். டெல்டா மாவட்டங்கள். கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை மட்டுமே வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் கடலோர மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மே 21ம் தேதியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. மே 22, 23ம் தேதிகளில் வட தமிழகம் புதுச்சேரி காரைக்காலில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

From around the web