தமிழகத்தின் இரண்டு நகராட்சிகளில் முழு ஊரடங்கு உத்தரவு: பரபரப்பு தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் இதனை அடுத்து தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் நான்கு மாதங்களாக தொடர் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் அவ்வப்போது ஒருசில மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வந்தது சென்னை உள்பட 6 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு உத்தரவு கடந்த ஐந்தாம் தேதி தான் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தற்போது
 

தமிழகத்தின் இரண்டு நகராட்சிகளில் முழு ஊரடங்கு உத்தரவு: பரபரப்பு தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் இதனை அடுத்து தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் நான்கு மாதங்களாக தொடர் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் அவ்வப்போது ஒருசில மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வந்தது சென்னை உள்பட 6 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு உத்தரவு கடந்த ஐந்தாம் தேதி தான் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் ஞாயிறு தவிர மற்ற அனைத்து நாட்களிலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன்னர் தமிழகத்தில் இரண்டு நகராட்சிகளில் எட்டு நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி மற்றும் புதுக்கோட்டை நகராட்சி ஆகிய இரண்டு நகராட்சிகளில் வரும் 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 23ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை காய்கறி, இறைச்சி, மருந்து கடைகள், பெட்ரோல் பங்குகள், பால் ஆகிய கடைகளைத் தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் இந்த இரு நகராட்சி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

From around the web