தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மார்ச் மாதம் 7579 கோடி ஜிஎஸ்டி வரி!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்கு தமிழகத்தில் பலர் பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளனர்.இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்காக தமிழகத்தில் ஏற்பாடுகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. எந்த ஒரு கூட்டணியுமின்றி அனைத்து தொகுதியிலும் தனது வேட்பாளர்களை அறிவித்தது நாம் தமிழர் கட்சி.

இந்தியாவில் சில வருடங்களுக்கு முன்பு ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது. இதன் ஆரம்ப கட்டத்தில் பல குறு சிறு தொழிலாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மேலும் பொருட்களின் மீதான வரிகளும் அதிகமாக வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு தமிழகத்தில் மார்ச் மாதத்தில் 7579 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இது கடந்தாண்டை விட அதிகமாகவும் உள்ளது எனவும் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி ஆனது தமிழகத்தில் 6177 கோடி வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 7 ஆயிரத்து 579 கோடி வசூலிக்கப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மார்ச் மாதம் 23 சதவீதம் அதிகமாக ஜிஎஸ்டி வரி வசூலிக்கக்கப்பட்டதாக நீதி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.