அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கூடாது: பாஜக திடீர் போர்க்கொடி

 

நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு என சமீபத்தில் தமிழக அரசு மசோதா இயற்றியது. இந்த மசோதா தற்போது ஆளுநரின் கையெழுத்துக்காக காத்திருக்கிறது என்பதும் ஆளுநர் இதுகுறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் திடீரென பாஜகவின் கல்விப் பிரிவு மாநில செயலாளர், தமிழக கவர்னருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க கூடாது என தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

ஒருபக்கம் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுனர் அனுமதி அளிக்க வேண்டும் என்று பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ள நிலையில் இன்னொரு பக்கம் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இழப்பீடு வழங்கக் கூடாது என பாஜக நிர்வாகி ஒருவரே கடிதம் எழுதி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web