7.5 சதவிகித உள் ஒதுக்கீடு: தமிழக கவர்னர் அதிரடி முடிவு!

 

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் மசோதாவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அனுமதி வழங்கி கையெழுத்திட்டுள்ளார்.

இந்த மசோதாவில் கையெழுத்திடுவது குறித்து முடிவெடுப்பதில் கவர்னர் கால தாமதம் செய்ததால் நேற்று தமிழக அரசு அதிரடியாக, இதுகுறித்த சட்டத்தை அரசாணையாக வெளியிட்டது. இதனால் கவர்னர் அங்கீகாரம் இல்லாமலேயே சட்டம் அமலுக்கு வந்தது.

இந்த நிலையில் இன்று கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சொலிசிட்டர் ஜெனரலிடம் கவர்னர் அறிவுரை கேட்டதாகவும், செப்டம்பர் 26-ஆம் தேதி கவர்னர் அனுப்பிய கடிதத்திற்கு சொலிசிட்டர் ஜெனரல் தற்போது பதில் வழங்கியுள்ளதாகவும், அவரது கருத்தை பரிசீலித்து, இந்த சட்டத்திற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 300 பேர்களுக்கு இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்கும் என்பதும் மகிழ்ச்சியான ஒரு விஷயம் ஆகும். ஒருவேளை இந்த சட்டம் அமலுக்கு வந்திருக்காவிட்டால், வெறும், 8 அரசு பள்ளி மாணவர்களுக்குத்தான் மருத்துவ படிப்பு படிக்க இடம் கிடைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web