இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7466 பேர் கொரோனாவால் பாதிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் ஓரளவு தாக்கத்தினை ஏற்படுத்திய நிலையில், இத்தாலி, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் பெரிய அளவில் உயிர்களைப் பலி வாங்கியுள்ளது. இந்தியாவில் மார்ச் மாதத் துவக்கத்தில் உருவான கொரோனா வைரஸ் துவக்கத்தில் மிதமாகவே பரவி வந்தது. இதனைக் கட்டுக்குள் வைக்க 60 நாட்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோதும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. இந்தியாவின் மற்ற இடங்களில் கொரொனாவின் தீவிரம் குறைந்தபோதிலும், 11 நகரங்களில் மட்டுமே கொரோனா தலைவிரித்து ஆடுகிறது. இந்திய மத்திய சுகாதாரத்துறை
 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7466 பேர் கொரோனாவால் பாதிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் ஓரளவு தாக்கத்தினை ஏற்படுத்திய நிலையில், இத்தாலி, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் பெரிய அளவில் உயிர்களைப் பலி வாங்கியுள்ளது. இந்தியாவில் மார்ச் மாதத் துவக்கத்தில் உருவான கொரோனா வைரஸ் துவக்கத்தில் மிதமாகவே பரவி வந்தது.

இதனைக் கட்டுக்குள் வைக்க 60 நாட்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோதும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. இந்தியாவின் மற்ற இடங்களில் கொரொனாவின் தீவிரம் குறைந்தபோதிலும், 11 நகரங்களில் மட்டுமே கொரோனா தலைவிரித்து ஆடுகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7466 பேர் கொரோனாவால் பாதிப்பு!!

இந்திய மத்திய சுகாதாரத்துறை இந்தியாவில் இதுவரை 165799 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒருநாள் மட்டும் 7466 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 175 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்றையநாள் கணக்கெடுப்பின்படி கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4706 ஆக உள்ளது. மேலும் 7466 என்ற இந்த பாதிப்பானது இதுவரை வெளியான உச்சபட்ச பாதிப்பினைவிட மிக அதிகம் என்றும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை ஒருபுறம் உயர்ந்தாலும், மற்றொருபுறம் ஊரடங்கானது தளர்த்தப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

From around the web