வந்தே பாரத்: இலங்கையில் இருந்து கப்பலில் அழைத்துவரப்பட்ட 713 இந்தியர்கள்!!

வந்தே பாரத் திட்டத்தின்மூலம் இலங்கையில் இருந்து 713 இந்தியர்கள் கப்பலில் தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்து உள்ளனர். சீனாவில் உருவான கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் தலைவிரித்து ஆடுகிறது. மூன்றாம் கட்டத்தினை எட்டியுள்ள நிலையில் மிக அதிக அளவில் கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்தநிலையில் மார்ச் 24 ஆம் தேதி துவங்கி, மே 31 ஆம் தேதி வரையில் 4 கட்டங்களாக ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டது. மேலும் கொரொனா தீவிரமாக உள்ள பகுதிகளைத் தவிர்த்து, பிற
 
வந்தே பாரத்: இலங்கையில் இருந்து கப்பலில் அழைத்துவரப்பட்ட 713 இந்தியர்கள்!!

வந்தே பாரத் திட்டத்தின்மூலம் இலங்கையில் இருந்து 713 இந்தியர்கள் கப்பலில் தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்து உள்ளனர்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் தலைவிரித்து ஆடுகிறது. மூன்றாம் கட்டத்தினை எட்டியுள்ள நிலையில் மிக அதிக அளவில் கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்தநிலையில் மார்ச் 24 ஆம் தேதி துவங்கி, மே 31 ஆம் தேதி வரையில் 4 கட்டங்களாக ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டது.

மேலும் கொரொனா தீவிரமாக உள்ள பகுதிகளைத் தவிர்த்து, பிற இடங்களில் ஊரடங்கானது தளர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது திடீரென விமான சேவைகளும் நிறுத்தப்பட, பிற நாடுகளில் இந்தியர்கள் மாட்டிக் கொண்டனர். அவர்களை வந்தே பாரத் என்னும் திட்டத்தினை உருவாக்கி, அதன் அடிப்படையில் பிறநாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்டு வருகின்றனர்.

வந்தே பாரத்: இலங்கையில் இருந்து கப்பலில் அழைத்துவரப்பட்ட 713 இந்தியர்கள்!!

அதாவது தொழில், படிப்பு, சுற்றுலா போன்ற காரணங்களால் இலங்கையில் கடந்த 2 மாதங்களாக சிக்கித் தவித்த இந்தியர்களை வந்தே பாரத் திட்டம் மூலம் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். ஜலஸ்லா என்ற கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மேலும் இலங்கையில் இருந்து கிளம்பும் முன்னர் பயணிகளுக்கு கொரொனா சோதனைகள் நடத்தப்பட்டது. அதன்பின்னர் மாஸ்க் மற்றும் கிளவுஸ் அணிதல், சானிட்டசைர் பயன்படுத்துதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் அவர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

From around the web