வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த 71 அரிசி மூட்டைகள் பறிமுதல்!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் வாக்காளர்களுக்கு வழங்கப்படவிருந்த 71அரிசி மூட்டைகள் திமுகவினர் இடமிருந்து தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் வேலைப்பாடுகள் மிகவும் மும்முரமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் வேலைகளில் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தலைமை தேர்தல் அதிகாரியாக உள்ளார் சத்யபிரதா சாகு.

election

மேலும் தமிழகத்தில் தேர்தல் ஆணையம் பல்வேறு விதிமுறைகளை விதித்து வருகிறது. மேலும் பல பகுதிகளில் தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பகுதிகளில் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்படும் பணத்தையும் நகைகளையும் பறிமுதல் செய்து கொண்டிருக்கின்றனர். தற்போது புதிதாக ஒரு பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடியில் வாக்காளர்களுக்கு வழங்கப்படவிருந்த 71 அரிசி மூட்டைகளை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றி உள்ளனர். மேலும் இந்த 71 அரிசி மூட்டைகளை திமுகவினர் இடமிருந்து கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் இந்த அரிசி முறையானது சாயல்குடி பேரூராட்சி சமுதாயக் கூடத்தில் பதுக்கப்பட்ட தாகவும் அங்கிருந்து தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அரிசி சிப்பங்களை வழங்க திட்டமிட்டு இருந்த திமுக பிரமுகர் சசிகுமாரிடம்  அதிகாரிகள் தீவிர விசாரணையில் உள்ளனர்.

From around the web