70% கட்டுமான பணிகள் முடங்கின! காரணம் "விலைவாசி"யின் உச்சநிலை!!

ஊரடங்கிற்கு முன்பைவிட ஊரடங்கிற்கு பின்பு கட்டுமான பொருட்களின் விலை அதிகம் உயர்ந்துள்ளதாக காணப்படுகிறது
 
cement

நேற்றைய தினம் தமிழகத்தில் அதிகமாகப் பேசப்பட்ட வார்த்தையாக காணப்பட்டது கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு. மேலும் இதுகுறித்து தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் சார்பில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்திருந்தார். மேலும் அவர்களிடம் முடிந்த அளவுக்கு விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அல்லது தமிழக அரசின் இத்தகைய பொருட்களை தாமாக முன்வந்து ஏற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது பல புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது.thennarasu

மேலும் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் கட்டுமான பொருட்களின் விலையானது மிகவும் கடுமையாக உயர்ந்து அந்த தொழிலை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. அதன்படி சிமெண்ட் ஜல்லி மணல்  விலையானது திடீரென அதிகரித்ததால் நெருக்கடியில் தவிக்கின்றனர் சாமானியர்கள். மேலும் இந்த கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்து மிகவும் தொழிலை முடக்கி வைக்கிறது. மேலும் இந்த விலை உயர்வால் 70% கட்டுமான பணிகள் இதுவரை முடக்கி என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்தப் பொருட்களின் விலையானது ஊரடங்கு முன்பு ஒரு விலையிலும் ஊரடங்கு பின்பு தற்போது வேறு களிலும் காணப்படுகிறது. அதன்படி சிமெண்ட் மூட்டை ஒன்றானது ஊரடங்கு முன்பாக 370 ரூபாய்க்கு விற்பனையானது தற்போது இந்த ஊரடங்கு காலத்தின் பிற்பகுதியில் 520 ரூபாய்க்கு ஒரு மூட்டை விற்பனை செய்வது சாமானியர்களை மிகவும் சவாலாக காணப்படுகிறது. மேலும்  முன்பாக கம்பி ஒரு டன்  45,000 ரூபாய்க்கு விற்பனையானது தற்போது இந்த கம்பியானது ஒரு டன் விலை 70 ஆயிரத்துக்கு விற்பனை , மேலும் மணல் ஒரு யூனிட் ஆனது முன்பாக 3,500 ரூபாய்க்கு விற்பனையானது தற்போது அவை 5,200 ரூபாய்க்கு விற்பனையாகி தொழிலை மிகவும் பாதிக்கிறது.

மேலும் செங்கல் ஒரு லோடு 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது தற்போது 24 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் கட்டுமான பொருட்கள் தற்போது விலை மிகவும் உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் கட்டுமான தொழில் மிகவும் முடங்கி காணப்படுகின்றன. மேலும் தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேர் நேரடியாக இந்த விலை உயர்வால் பாதிப்பை சந்திக்கின்றனர். மேலும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி அளித்துள்ளார். மேலும் அவர் இத்தகைய விலை விரைவில் கட்டுக்குள் கொண்டு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

From around the web