போலி நகைகளை வைத்து 7 கோடி ரூபாய் மோசடி!!

தாய்கோ வங்கி மூலம் சிறு குறு தொழில் நிறுவனங்கள் சார்பாக வங்கிகளில் போலி நகைகளை வைத்து 7 கோடி ரூபாய் மதிப்பில் மோசடி நடந்தது
 
jewel

தற்போது நம் தமிழகத்தில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலைமையே காணப்படுகிறது.  தமிழகத்தில் தொடர்ச்சியாக ஊழலானது அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் பலரும் நூதனமான முறையில் ஊழல் சம்பவத்தில் ஈடுபடுவதும் அவ்வப்போது தெரிய வருகிறது. இது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த நிலையில் தற்போது போலி நகைகளை வைத்து ஏழு கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.money

அந்த படி தாய்கோ வங்கி மூலம் சிறு குறு தொழில் நிறுவனங்கள் சார்பாக வங்கிகளில் போலி நகைகளை வைத்து சுமார் 7 கோடி மதிப்பிலான ரூபாய் மோசடி செய்ததாக தகவல் கிடைத்தது. மேலும் நாமக்கல் சேலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள வங்கிகளில் போலி நகைகளை வைத்து ஏழு கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் போலி நகை தொடர்பாக தமிழகத்தில் 45 வங்கிகளில்  ஆய்வு நடைபெற்று வருகிறது என்றும் அமைச்சர் அன்பரசன் கூறியுள்ளார். மேலும் கூட்டுறவு வங்கிகளில் பல்வேறு நகைக்கடன் முறைகேடுகள் நடந்துள்ளது என்றும் திருத்தணி எம்எல்ஏ சந்திரன் கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் போலி நகைகளை வைத்து மோசடி செய்த தொடர்பாக தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.

From around the web