நீட் தேர்வுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் 7 மாநில முதல்வர்கள்

செப்டம்பர் 13 ஆம் தேதி நீட்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்தத் தேர்வுக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் அச்சம் இன்றி தேர்வு எழுதலாம் என்றும் தேசிய முகமை தேர்தல் ஆணையர் வினித் ஜோஷி அவர்கள் தெரிவித்துள்ளார் இந்த நிலையில் நீட் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 7 மாநில முதல்வர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேற்குவங்க முதலமைச்சர் மம்தா
 

நீட் தேர்வுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் 7 மாநில முதல்வர்கள்

செப்டம்பர் 13 ஆம் தேதி நீட்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்தத் தேர்வுக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் அச்சம் இன்றி தேர்வு எழுதலாம் என்றும் தேசிய முகமை தேர்தல் ஆணையர் வினித் ஜோஷி அவர்கள் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் நீட் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 7 மாநில முதல்வர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மற்றும் பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங்,ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் மற்றும் புதுவை முதல்வர் நாராயணசாமி ஆகிய ஏழு முதல்வர்கள் சுப்ரீம் கோர்ட்டில் இதுகுறித்து வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளனர்

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் கடினமான ஒரு சூழ்நிலையை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அதனால் நீட் மற்றும் ஜே.ஈ.ஈ தேர்வுகளை ரத்து செய்ய அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்றும் ஏழு மாநில முதல்வரும் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த பட்டியலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

From around the web