இந்தியாவின் தென் கடைசி மாவட்டத்தில் ஒரே நாளில் 69 பேர் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 69 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்க பட்டுள்ளனர்!
 
இந்தியாவின் தென் கடைசி மாவட்டத்தில் ஒரே நாளில் 69 பேர் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தின் தென் கடைசி மாவட்டமாக உள்ளது கன்னியாகுமரி மாவட்டம். இது தமிழகத்தின் தென் கடைசி மட்டுமின்றி இந்திய திருநாட்டின் தென் கடைசி மாவட்டமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த  கன்னியாகுமரியில் இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா ,அரபிக்கடல் ஆகிய மூன்றும் சங்கமிக்கும் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த பகுதி ஆகும். மேலும் இந்த கன்னியாகுமரியில் காணப்படும் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம் இந்திய திருநாடு சுற்று தளமாக இல்லாமல் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் சுற்றுலாத்தலமாக வந்து செல்கின்றனர்.

corona

அத்தகைய சிறப்பு பெற்றது இந்த கன்னியாகுமரி இந்நிலையில் தற்போது கன்னியாகுமரியில் தொடர்ந்து சோகம் நடைபெறுகிறது. அதன் கடந்த மாத இறுதியில் மீண்டும் கொரோனா  அதிகரித்துள்ளது. மேலும் கன்னியாகுமரி ஒரேநாளில் 69 பேர் கொரோனா  பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 17355 கொரோனா  நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல் .

பாதிக்கப்பட்டுள்ள அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் அனைத்து பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பணிகள் மிகவும் பலப்படுத்து விட்டதாகவும், சுகாதாரத்துறை சார்பில் தொடர்ந்து வேலைகள் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் கஷ்டத்தில் உள்ளனர்.

From around the web