60 வயது தாத்தாவை டிரெட்சரில் தள்ளிய 6 வயது சிறுவன்: லஞ்சம் காரணமா?

உத்தரபிரதேச மருத்துவமனையில் டிரெட்சரை தள்ளிச் செல்ல மருத்துவமனை ஊழியர் லஞ்சம் கேட்டதால் 60 வயது தாத்தாவை ஆறு பேரன் டிரெட்சரில் தள்ளிச் சென்ற வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஒரு மருத்துவமனையில் 60 வயது முதியவர் ஒருவர் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அந்த முதியவரை ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்ல மருத்துவமனை ஊழியர் 30 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் அந்த முதியவரை அழைத்துச் சென்ற குடும்பத்தினரிடம் பணமில்லை.
 

60 வயது தாத்தாவை டிரெட்சரில் தள்ளிய 6 வயது சிறுவன்: லஞ்சம் காரணமா?

உத்தரபிரதேச மருத்துவமனையில் டிரெட்சரை தள்ளிச் செல்ல மருத்துவமனை ஊழியர் லஞ்சம் கேட்டதால் 60 வயது தாத்தாவை ஆறு பேரன் டிரெட்சரில் தள்ளிச் சென்ற வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஒரு மருத்துவமனையில் 60 வயது முதியவர் ஒருவர் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அந்த முதியவரை ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்ல மருத்துவமனை ஊழியர் 30 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் அந்த முதியவரை அழைத்துச் சென்ற குடும்பத்தினரிடம் பணமில்லை. இதனை அடுத்து டிரெட்சரை தள்ளாமல் அந்த மருத்துவ ஊழியர் சென்றுவிட்டார்

இதனை அடுத்து ஆறு வயது பேரன் தனது அம்மா மற்றும் சகோதரி உதவியுடன் தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிச் சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனை அடுத்து டிரெட்சரை தள்ளிச் செல்ல பணம் கேட்ட மருத்துவ ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

அரசு மருத்துவமனையில் ஏழை எளியவர்களிடம் லஞ்சம் கேட்கும் மருத்துவமனை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

From around the web