தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக கைது செய்யப்பட்டவர்கள் 6 லட்சத்து 20 ஆயிரத்து 921 பேர்!!

கொரோனாவால் உலகமே ஸ்தம்பித்து வருகையில், இந்தியாவில் கொரோனா மூன்றாவது கட்டத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பானது ஒருநாளைக்கு பல ஆயிரங்கள் என்ற எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றது. அதிலும் கொரோனா பாதிப்பானது மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி போன்ற 4 இடங்களில் அதிகரித்த வண்ணமே உள்ளது. அதாவது மகாராஷ்டிராவில் 97648 பேருக்கும், தமிழகத்தில் 38716 பேருக்கும், டெல்லியில் 34687 பேருக்கும், குஜராத்தில் 22032 பேருக்கும் பாதிப்பு உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையில் 2 வது இடத்தினைப் பிடித்துள்ள
 
தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக கைது செய்யப்பட்டவர்கள் 6 லட்சத்து 20 ஆயிரத்து 921 பேர்!!

கொரோனாவால் உலகமே ஸ்தம்பித்து வருகையில், இந்தியாவில் கொரோனா மூன்றாவது கட்டத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பானது ஒருநாளைக்கு பல ஆயிரங்கள் என்ற எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றது.

அதிலும் கொரோனா பாதிப்பானது மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி போன்ற 4 இடங்களில் அதிகரித்த வண்ணமே உள்ளது. அதாவது மகாராஷ்டிராவில் 97648 பேருக்கும், தமிழகத்தில் 38716 பேருக்கும், டெல்லியில் 34687 பேருக்கும், குஜராத்தில் 22032 பேருக்கும் பாதிப்பு உள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக கைது செய்யப்பட்டவர்கள் 6 லட்சத்து 20 ஆயிரத்து 921 பேர்!!

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையில் 2 வது இடத்தினைப் பிடித்துள்ள தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோதும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கையினைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

அதற்கு முக்கிய காரணம் பலரும் அரசாங்கத்தின் விதிமுறைகளை மீறி, ஊரடங்கினை அலட்சியமாக எண்ணிப் பயணங்கள் மேற்கொண்டதே ஆகும். இவ்வாறு அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளை மதிக்காமல் செல்வோர்மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து, அபராதம் வசூலித்து வருகின்றனர்.

இந்த ஊரடங்கு காலத்தில், ஊரடங்கை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்ட நிலையில், கைதாகியுள்ளவர்கள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதாவது இதுவரை தமிழகத்தில் 6 லட்சத்து 20 ஆயிரத்து 921 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டு உள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. இதுமட்டுமின்றி பல லட்சக்கணக்கானவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுவரை 5 லட்சத்து 75 ஆயிரத்து 625 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

From around the web