84 நாட்கள் நாடுகளுக்கு 6.45 கோடி கொரோனா தடுப்பு மருந்து ஏற்றுமதி!

84 நாடுகளுக்கு 6.45 கோடி கோரணா தடுப்பு மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன்  தகவல்!
 
84 நாட்கள் நாடுகளுக்கு 6.45 கோடி கொரோனா தடுப்பு மருந்து ஏற்றுமதி!

மக்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருக்கும் ஆட்கொல்லி நோயாக, கண்ணுக்குத் தெரியாத இப்படி பல பெயர்களை கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்புக்கு உள்ளாகிய ஒரு வைரஸ் கிருமி கொரோனா.இந்த கொரோனா வைரஸ் ஆனது முதன்முதலில் சீன நாட்டில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மேலும் இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கமானது கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே பரவத்தொடங்கியது.

covid-19

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக கொரோனாவின் தாக்கமானது மிகவும் அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்திய மாநிலங்களான டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரம் மற்றும் தமிழகம் போன்ற ஒருசில மாநிலங்களில் கொரோனா தாக்கம் தலைவிரித்தாடுகிறது. மேலும் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ளன. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நலவாழ்வு துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், மேலும் அவர் சில தகவல்களையும் கூறினார்.

அதன்படி 84 நாடுகளுக்கு 6.45 கோடி கொரோனா மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளதாக அவர் கூறினார். இந்தியாவில் மருத்துவ துறை பணியாளர்கள் 89 லட்சம் பேர் முதல் கொரோனா தடுப்பூசியும் 54 லட்சம் பேர் இரண்டாவது கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டு  உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கூறினார். மேலும் முன் களப்பணியாளர்கள் 98 லட்சம் பேர் முதல் கொரோனா தடுப்பூசியும் இரண்டாவது கொரோனா தடுப்பூசி 45 லட்சம் பேர் போடப்பட்டு  உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் 9.43 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளதாகவும் மத்திய நலவாழ்வு துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கூறினார்.

From around the web