டைனோசர் கால்தடத்தை கண்டுபிடித்த 5 வயது சிறுவன்: 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதா?

 

சீனாவில் 5 வயது சிறுவன் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசரின் காலடித்தடங்களை கண்டு பிடித்துள்ளார். சீனாவை சென் என்ற 5 வயது சிறுவன் தனது பெற்றோருடன் வனப்பகுதிக்கு சுற்றுலா சென்றபோது அங்கிருந்த வித்தியாசமான காலடித்தடங்களை பார்த்து உடனே இது குறித்து அந்த சிறுவன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார் 

இதனை அடுத்து அந்த சிறுவனின் பெற்றோர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வில் பறவை போன்ற டைனோசர் இனம் ஒன்றின் காலடித்தடம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த டைனோசர் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினம் என்றும் மணல் மற்றும் பாறை திட்டுக்களாக இந்த காலடித்தடம் மாறி உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்

130 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் கால்தடத்தை கண்டுபிடித்த 5 வயது சிறுவனுக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன என்பதும் இந்த டைனோசரின் கால் தடத்தின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web