5-ம் கட்ட ஊரடங்கு அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு: தியேட்டர் திறக்க அனுமதி

 

நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய 5-ம் கட்ட ஊரடங்கு குறித்த அறிவிப்பை சற்றுமுன் மத்திய அரசு வெளியிட்டது 

இதன்படி பொழுதுபோக்கு பூங்காக்களை அக்டோபர் 15 முதல் திறக்கலாம் என்றும், 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 15 முதல் விளையாட்டு வீரர்களுக்கான நீச்சல் குளங்களை திறக்க அனுமதிக்கப்படும் என்றும், பள்ளி கல்லூரிகளை திறப்பது பற்றி மாநில அரசுகளே முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்றும் மத்திய உள்துறை அறிவித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் மாணவர்களின் வருகைப் பதிவு தொடர்பாக எந்த நிர்பந்தமும் கொடுக்கக்கூடாது
என்றும், பள்ளி/ கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கற்றலில் ஆர்வமுடைய மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல எந்தக் கட்டுபாடுகளும் கிடையாது என்றும் மத்திய உள்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் அக்டோபர் 31-வரை தளர்வுகள் இன்றி ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது

From around the web