முன்னாள் காங்கிரஸ் எம்பிக்கு சொந்தமான 5 மாடி கட்டிடம் இடிந்தது: சென்னையில் பரபரப்பு!

 

முன்னாள் காங்கிரஸ் எம்பி ஒருவருக்கு சொந்தமான 5 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

முன்னாள் காங்கிரஸ் எம்பி ஜே.எம்.ஆரூண் அவர்களுக்கு சொந்தமான ஐந்து மாடி கட்டடம் ஒன்று சென்னை ராயப்பேட்டையில் இருந்தது. இந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இருப்பினும் இந்த கட்டிட விபத்தால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள முன்னாள் எம்பி ஜே.எம்.ஆரூண் அவர்களுக்கு சொந்தமான கட்டிடத்தில் 12 பேர் வாடகைக்கு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் இவர்கள் அனைவரும் ஏற்கனவே காலி செய்துவிட்டனர். ஒரே ஒரு பெண் மட்டுமே காலி செய்ய மறுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பதும் இந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தற்போது திடீரென அந்த கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தக் கட்டடத்தில் குடியிருந்த ஒரே ஒரு பெண்ணும் அவரது குடும்பத்தினரும் வீடு இடிந்தபோது அங்கு இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் 
எனவே இடிந்த இந்த கட்டிடத்தால் யாருக்கும் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முறையான பராமரிப்பின்றி பழமையான கட்டிடமாக இருந்தது என்பதே இந்த வீடு இடிந்தது காரணம் என்று விசாரணையில் தெரியவந்து உள்ளது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்


 

From around the web