5ஜிக்கும்  கொரோனாக்கும் சம்பந்தமே இல்லை! சொல்லப்போனால் இந்தியாவில் இன்னும் 5ஜி வரவில்லை!!

5ஜி தொழில்நுட்பத்திற்கும் கொரோனா வைரஸ் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று தொலைத்தொடர்பு துறை கூறியுள்ளது!
 
5g

தற்போது நாடெங்கும் கொரோனா அதிகமாக இருக்கிறது. இதனால் நாட்டில் பல பகுதியில் வாழும் மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். மேலும் பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கும் நடைமுறையில் உள்ளன.  இந்த காலகட்டத்தில் பல்வேறு விதமான வதந்திகள் எழுந்தன. அதிலும் குறிப்பாக 5ஜி  என்று அழைக்கப்படும் தொழில்நுட்பம் கொரோனாவுடன் சம்பந்தப் படுத்திப் பேசினார். இதனால் நாட்டு மக்கள் அனைவரும் இந்த புதிய தொழில்நுட்பத்திற்கு தற்போது வரை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.corona

எனினும் தற்போது இந்தியாவில் விற்பனையாகும் பெரும்பாலான மொபைல்களில் 5ஜி இணைப்பு உடன் தற்போது விற்பனையாவது தெரிகிறது இதனால் நம் நாட்டில் விரைவில் இந்த 5ஜி  தொழில்நுட்பம் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆட்கொல்லி நோயான கொரோனா  பரவலுக்கு இந்த தொழில்நுட்பமே காரணம் என்று வதந்தி பரவியது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தொலைத் தொடர்புத் துறை தற்போது சில தகவல்களை கூறியுள்ளது.

அதன்படி கொரோனாவிற்கும் 5ஜி க்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்றும் தொலைத்தொடர்பு துறை கூறியுள்ளது. அதன்படி மேலும் செல்போன் கோபுரங்களில் 5ஜி தொழில்நுட்பம் தொடர்பாக பரப்பப்படும் தகவல்கள் அனைத்தும் தவறானவை எனவும் அரசு கூறியுள்ளது. மேலும் இந்த 5ஜி   தொழில்நுட்ப இணைப்பு சோதனை இன்னும் இந்தியாவில் எங்கும் தொடங்கப்படவில்லை என்றும் தொலைத் தொடர்புத்துறை சார்பில் கூறப்படுகிறது.

From around the web