மீண்டும் சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: இன்று 1200க்கும் மேல்!

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு 1000ஐ விட குறைந்த நிலையில் இன்று மீண்டும் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அதாவது இன்று 1200ஐ தாண்டிய பாதிப்பு சென்னையில் உள்ளது தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5,995 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை
 

மீண்டும் சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: இன்று 1200க்கும் மேல்!

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு 1000ஐ விட குறைந்த நிலையில் இன்று மீண்டும் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அதாவது இன்று 1200ஐ தாண்டிய பாதிப்பு சென்னையில் உள்ளது

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5,995 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,67,430ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் இன்று மட்டும் 1282 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 122,757ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 101 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 6,340 பேர் பலியாகியுள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று 5764 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 307,677 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 72423 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 39,23,834 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web