கொரோனா இரண்டாம் அலையில் சிக்கிய 594 மருத்துவர்கள் இதுவரை பலி!!!

இந்திய அளவில் இதுவரை 594 மருத்துவர்கள் பலியாகி உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் தகவல்
 
corona

தற்போது நம் நாட்டில் அதிகமாகப் பேசப்படும் வார்த்தையாக கொரோனா உள்ளது. அதன்படி நோய்க்கு எதிராக நாட்டில் உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் காவலாளர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் தங்களது உயிரை கண்டுகொள்ளாமல் மக்களின் உயிரை காப்பாற்ற மிகுந்த போராடி வருகின்றனர். இத்தகைய மருத்துவர்களும் செவிலியர்களும் அவ்வப்போது கொரோனா  தாக்கப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது.  அசாமில் உறவினர்களால் மருத்துவர் சரமாரியாக தாக்கப்பட்டது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் தாக்கி 24 பேரையும் அம்மாநில அரசு உடனடியாக கைது செய்தது.ima

 தற்போது மருத்துவர்கள் இந்த நோய்க்கு போராடுவதும் போது மட்டுமின்றி அவர்களுக்கு இந்த நோய் கண்டறியப்பட்டு சில நேரங்களில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் நாளுக்கு நாள் மருத்துவர்களின் உயிரிழப்பும் அதிகமாக காணப்படுகிறது  தற்போது இந்திய மருத்துவ சங்கம் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இந்தியாவில் உருவாகியுள்ள இந்த இரண்டாம் அலையில் இதுவரை 594 மருத்துவர்கள் இந்த ஆட்கொல்லி நோயினால் உயிரிழந்துள்ளனர் என்றும் கூறியுள்ளது.

அதில் முதலிடத்தில் டெல்லியில் 107 மருத்துவர்கள் இதுவரை இந்த கொரோனா  நோயினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்றும் இந்திய மருத்துவர்கள் சங்கம் தகவல் அளித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 21 மருத்துவர்களும் இந்த நோயினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்றும் இந்திய மருத்துவர்கள் சங்கம் கூறியுள்ளது. அவர்கள் தங்களது உயிரைப் கண்டுகொள்ளாமல் மக்களின் உயிரை காப்பாற்ற இவ்வாறு களத்தில் இறங்கி பலரும் உயிரிழப்பது இந்த சோதனை மட்டுமின்றி அவர்கள் குடும்பத்திற்கு மிகுந்த வேதனையை உருவாக்கியுள்ளது.

From around the web