2வது அலையில் 594 மருத்துவர்கள் மரணம்: தமிழகத்தில் எத்தனை பேர்?

 
doctor

கொரோனா முதல் அலையில் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் இரண்டாவது அலையில் 594 மருத்துவர்கள் இது வரை பலியாகி உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பொதுமக்கள் மட்டுமின்றி பொதுமக்களுக்கு சிகிச்சை செய்து வரும் மருத்துவர்களும் ஆங்காங்கே பலியாகி வருகின்றனர் என்ற செய்தியை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இதுவரை இரண்டாவது அலையில் 594 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 21 மருத்துவர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே மிக அதிகபட்சமாக டெல்லியில்தான் 107 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் இதனை அடுத்து பீகாரில் 96 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை செய்து தங்கள் விலைமதிப்பில்லா உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு மத்திய மாநில அரசுகள் தகுந்த நிதி உதவி செய்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

From around the web