நீண்ட இடைவெளிக்கு பின் 1000க்கும் குறைந்த கொரோனா பாதிப்பு: மீள்கிறதா சென்னை?

சென்னையில் தினமும் கடந்த சில நாட்களாக 1000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் இன்று 984 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5880 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,85,024 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
 

நீண்ட இடைவெளிக்கு பின் 1000க்கும் குறைந்த கொரோனா பாதிப்பு: மீள்கிறதா சென்னை?

சென்னையில் தினமும் கடந்த சில நாட்களாக 1000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் இன்று 984 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5880 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,85,024 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் இன்று மட்டும் 984 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 107,109ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 119 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 4690 பேர் பலியாகியுள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று 6488 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 2,27,575 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 67,352 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 30,88,066 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

நீண்ட இடைவெளிக்கு பின் 1000க்கும் குறைந்த கொரோனா பாதிப்பு: மீள்கிறதா சென்னை?

From around the web