56 வயசுல  5 விதமான வழக்குப்பதிவா!! தாங்குவாரா அந்த போலி டாக்டர்?

கொடைக்கானலில் போலி பெண் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது!
 
doctor

தற்போது நம் தமிழகத்தில் உள்ள சூழ்நிலையால் பெரும்பாலான பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதுவும் குறிப்பாக நம் தமிழகத்தில் சுற்றுலா தளம் என்று கேட்டால் அனைவரும் முதலில் கூறுவது ஊட்டி அதற்கு அடுத்து அனைவரும் கூறுவது கொடைக்கானல் தான். மேலும் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன. உதாரணமாக கூற வேண்டுமென்றால் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. மேலும் அங்குள்ள விவேகானந்தர் மண்டபம் அனைத்து சுற்றுலா விரும்பிகளின் கண்ணைக் கவரும் விதமாக காணப்படுகிறது.kodaikanal

இதுபோன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு வாய்ந்த இடங்கள் உள்ள நிலையில் தற்போது தமிழகத்தில் ஊரடங்கு வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் வெளியே செல்ல முடியாத நிலை தமிழகத்தில் அதிகமாக உள்ளது. பொதுமக்களை வெளியே செல்ல முடியவில்லை என்றால் சுற்றுலாதலம் எப்படி இயங்கும் என்பதனை கருத்தில் கொண்டு அனைத்து சுற்றுலா தளங்களும் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அதிர்ச்சி தகவல் இத்தகைய சுற்றுலா தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் தற்போது போலி பெண் மருத்துவர் ஒருவர் கண்டறியப்பட்டு அவர் தற்போது கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அவரின் பெயர் மோகினி என்பதும் 56 வயது ஆகிறது என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை கிராமத்தில் உள்ளவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த போலி பெண் மருத்துவரான மோகினி மீது 5 பிரிவுகளின் கீழ் தற்போது கொடைக்கானல் போலீஸ் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் நோய் அதிகரிக்கும் இந்த நிலையில் இத்தகைய போலி மருத்துவர்கள் கண்டறிய படுவது மிகுந்த வேதனையோடு மட்டுமின்றி அவர்களிடம் சிகிச்சை பெற்றவர்களில் நிலையும் கருத்தில் கொள்ள வேண்டியதாக காணப்படுகிறது.

From around the web