இன்று ஒரே நாளில் பேருந்தில் பயணிக்க 54,000 பயணிகள் முன்பதிவு!

கடந்த நான்கு நாட்களில் சென்னையில் 10 ஆயிரத்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன தகவல்!
 

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆகிய நாளைய தினம் நடைபெற உள்ளது. அதற்காக தமிழகத்தில் தேர்தல் நிலைகளால் ஆனது மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.  தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாகு உள்ளார். மேலும் தேர்தல பல்வேறு விதிமுறைகளையும் உத்தரவுகளையும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் நகைகளின் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர்.

bus

தமிழகத்தில் சொந்த ஊரை விட்டு வெளியூருக்கு வேலை செய்வதற்காக பலர் சென்றனர். ஆயினும் அவர்கள் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு திரும்புவதற்கு வழிவகை செய்யுமாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.  தமிழகத்தின் தலைநகரமாக உள்ள சென்னையில் ஒன்றாம் தேதி முதல் கடந்த 4 நாட்களாக 10 ஆயிரத்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் இன்றைய தினம் மட்டும் பயணம் செய்வதற்காக 54 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் 5 மையங்களில் இருந்து இன்று பேருந்து இயக்கப்பட்டன.இந்த ஐந்து மையங்கள் தாம்பரம், மாதாவரம், கேகே நகர், கோயம்பேடு மற்றும் பூந்தமல்லி ஆகும் சென்னையில் இதுவரை கடந்த நான்கு நாட்களில் 4லட்சத்து 22 ஆயிரத்து 957 பேர் பயணம் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது. மேலும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் தகவல் உள்ளது.

From around the web