ரூ.5000 லஞ்சம் கொடுக்காததால் பிரசவம் பார்க்க மறுத்த அரசு மருத்துவமனை ஊழியர்கள்!..

ரூ.5000 லஞ்சம் கொடுக்காததால் நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவம் பார்க்க அரசு மருத்துவமனை ஊழியர்கள் மறுத்ததாக திடுக்கிடும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் டாமோ என்ற பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சமீபத்தில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியால் துடித்து கொண்டு வந்தார். அவரை பரிசோதனை செய்த மருத்துவமனை ஊழியர்கள் ரூ.5000 கொடுத்தால் மட்டுமே பிரசவம் பார்க்க முடியும் என்று நிபந்தனை விதித்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து கர்ப்பிணியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில்
 

ரூ.5000 லஞ்சம் கொடுக்காததால் பிரசவம் பார்க்க மறுத்த அரசு மருத்துவமனை ஊழியர்கள்!..

ரூ.5000 லஞ்சம் கொடுக்காததால் நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவம் பார்க்க அரசு மருத்துவமனை ஊழியர்கள் மறுத்ததாக திடுக்கிடும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் டாமோ என்ற பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சமீபத்தில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியால் துடித்து கொண்டு வந்தார். அவரை பரிசோதனை செய்த மருத்துவமனை ஊழியர்கள் ரூ.5000 கொடுத்தால் மட்டுமே பிரசவம் பார்க்க முடியும் என்று நிபந்தனை விதித்துள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து கர்ப்பிணியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. பிரசவம் பார்க்க லஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஊழியர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்றும் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவமனையில் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

From around the web