500 நெருங்கும் ஆட்கொல்லி கொரோனா தொற்று ! திணறும் திருநெல்வேலி மக்கள்!

நெல்லையில் கடந்த 24 மணி நேரத்தில் 491 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது!
 
500 நெருங்கும் ஆட்கொல்லி கொரோனா தொற்று ! திணறும் திருநெல்வேலி மக்கள்!

இந்தியாவிலேயே சிறப்பான மாநிலம் என்று கூறினால் முதலில் அனைவரும் கூறுவது நம் தமிழ்நாடுதான்.  தமிழ் நாட்டில் எங்கு பார்த்தாலும் நீர்வளமும் நிலவளமும்  மிகுந்து காணப்படுகிறது. மேலும் தமிழகத்தில் காவிரி வைகை தாமிரபரணி போன்ற பல ஆறுகளும் ஓடுவது மிகுந்த மகிழ்ச்சியான விஷயம்தான், மேலும் தமிழகத்தில் வற்றாத ஆறு என்று அழைக்கப்படுகிறது தாமிரபரணி ஆறு. இந்த ஆறு திருநெல்வேலி மாவட்டம் தொடங்கி திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு குடிநீராக காணப்படுகிறது.

corona

மேலும் இந்த திருநெல்வேலியானது ஆறுமட்டுமின்றி அருவா மற்றும் அல்வா மிகவும் புகழ்பெற்றது இத்தகைய புகழ்பெற்ற திருநெல்வேலியானது தற்போது மிகுந்த சோகத்தில் காணப்படுகிறது.ஏனென்றால் இந்த திருநெல்வேலியில் ஆட்கொல்லி நோயான கொரோனா நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் இந்த கொரோனா நோயானது 491 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதுவரை நெல்லை மாநகர மாவட்டத்தில் 19327 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப் படுகிறது.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2779 பேர் வீடு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் நெல்லையில் இதுவரை 226 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.இதனால் தாமிரபரணி பாயும் இந்த ஊரில் கொரோனா தலைவிரித்தாடுகிறது தெரியவந்துள்ளது. மேலும் கொரோனா நோய்தொற்று  மட்டுமின்றி கொரோனா உயிர் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

From around the web