தனக்குத்தானே ரூ.50 லட்சம் அபராதம் விதித்து கொண்ட அமைச்சர்

ஒரு விழாவிற்கு ஒரு அமைச்சர் தாமதமாக வருவது என்பது தமிழகத்தில் சர்வ சாதாரணமாக நடைபெறும் வழக்கம். ஆனால் அரசு விழாவுக்கு தாமதமாக வந்ததால் ஒருவர் தனக்குத் தானே ரூ.50 லட்சம் அபராதம் விதித்துக் கொண்ட சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது. ஆம், தெலுங்கானா நிதியமைச்சர் ஹரிஷ் ராவ், அரசு விழாவுக்கு தாமதமாக வந்ததால் தனக்குத் தானே ரூ.50 லட்சம் அபராதம் விதித்துக் கொண்டார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சித்திபேட்டா மாவட்டம், துப்பாக்கா நகராட்சி சார்பில் மகளிர் சுயஉதவிக்
 

தனக்குத்தானே ரூ.50 லட்சம் அபராதம் விதித்து கொண்ட அமைச்சர்

ஒரு விழாவிற்கு ஒரு அமைச்சர் தாமதமாக வருவது என்பது தமிழகத்தில் சர்வ சாதாரணமாக நடைபெறும் வழக்கம். ஆனால் அரசு விழாவுக்கு தாமதமாக வந்ததால் ஒருவர் தனக்குத் தானே ரூ.50 லட்சம் அபராதம் விதித்துக் கொண்ட சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது.

ஆம், தெலுங்கானா நிதியமைச்சர் ஹரிஷ் ராவ், அரசு விழாவுக்கு தாமதமாக வந்ததால் தனக்குத் தானே ரூ.50 லட்சம் அபராதம் விதித்துக் கொண்டார்.

தனக்குத்தானே ரூ.50 லட்சம் அபராதம் விதித்து கொண்ட அமைச்சர்

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சித்திபேட்டா மாவட்டம், துப்பாக்கா நகராட்சி சார்பில் மகளிர் சுயஉதவிக் குழு வினருக்கு பிளாஸ்டிக் குப்பை பக்கெட் வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த அமைச்சர் ஹரீஷ் ராவ் குறிப்பிட்ட நேரத்துக்கு வரவில்லை. இதனால் நிகழ்ச்சி தாமதமாக தொடங்கியது

இந்த நிலையில் நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததற்கு நிதியமைச்சர் ஹரீஷ் ராவ் மன்னிப்பு கேட்டுக்கொண்டதோடு தனக்குத் தானே ரூ.50 லட்சம் அபராதம் விதித்துக் கொள்வதாகவும், அந்த அபராத பணத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு புதிய கட்டிடம் கட்டித் தருவதாகவும் உறுதி அளித்தார். அமைச்சரின் இந்த அபராத அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது

From around the web