நேற்று 100 நாளை பின்னர் 50; நேற்று 50 நாளை பின்னர் 25! என்னது?

முன்னதாக திருமண நிகழ்ச்சிகளில் நூறு பேர் கலந்து கொள்ளும் இந்த நிலையில் தற்போது 50 பேருக்கு மட்டுமே அனுமதித்துள்ளது அரசு!
 
நேற்று 100 நாளை பின்னர் 50; நேற்று 50 நாளை பின்னர் 25! என்னது?

தமிழகத்தில் சில நாட்களாக ஆட்கொல்லி நோயான கொரோனா நோயின் தாக்கம் இரண்டாவது அலையாக எழுந்துள்ளது. இந்த கொரோனா கடந்த ஆண்டில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு சில வாரங்களாக இந்நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது மக்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் தமிழகம் சார்பில் சில தினங்களுக்கு முன்பாகபல்வேறு கட்டுப்பாட்டுக்குகளையும் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பாக இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் பட்டன. எனினும் தமிழகத்தின் சார்பில் ஞாயிறு கிழமைகளில் முழுநேர ஊர் அடங்கும் அமல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.marriage

தொடர்ந்து நாளைய தினம் தமிழகத்தில் முழு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்த உள்ளது.இந்நிலையில் இன்று காலை முதல் தமிழகம் சார்பில் பல்வேறு தீவிர ஆலோசனை நடைபெற்றது. காரணம் என்னவெனில் தமிழகத்தில் மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது தமிழக அரசானது அதிரடி மாற்றங்களுடன் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் தற்போது திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது என்று கூறியுள்ளது .ஆனால் இதற்கு முந்தைய கட்டுப்பாட்டில் 100 பேருக்கு அனுமதி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இறுதி ஊர்வலங்கள் அதை சார்ந்த சடங்குகளில் 25 பேருக்கு மேல் அனுமதிக்கக்கூடாது என்றும் கூறியுள்ளது .மேலும் பழைய கட்டுப்பாட்டில்  50 பேருக்கு அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அனைத்து மதங்கள் பெரிய அரங்குகள் கூடாரங்கள் அனைத்தும் மூடப்படும் என்றும் கூறியுள்ளது. தேனீர் கடைகளில்உணவகங்களில் பார்சல் மட்டுமே அனுமதித்துள்ளது. மேலும் அங்கு அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை என்றும் கூறியுள்ளது.  தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மக்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறியுள்ளது. மேலும் ஆந்திரா கர்நாடகா கேரளாவில் இங்கு வருவோருக்கு இ பாஸ் கட்டாயம் என்றும் கூறியுள்ளது.

From around the web