நிலாவில் கால் பதிச்சு 50 வருஷம் ஆய்டுச்சு…!!!

பூமியின் துணை கிரகமான சந்திரனில் மனிதன் வாழ்வதற்கான சூழ்நிலைகள் இல்லை என்பது ஓரளவு தெளிவான பின்னரும், சந்திரனில் ஆய்வு நடத்த பல்வேறு நிறுவனங்களும் போட்டியிட்டு வருகின்றன. அந்த வகையில் ரஷியாவும், அமெரிக்காவும் விண்வெளி ஆராய்ச்சியில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல் ஆராய்ச்சி செய்து வந்தனர். அதிலும் சந்திரனுக்கு யார் ஆளை அனுப்பப் போகிறார்கள் என்பதில் பல ஆண்டுகளாக கடும் போட்டி நிலவியது. இப்போதைய கால கட்டத்திற்கு வேண்டுமானால் விண்வெளிக்குச் செல்வதெல்லாம் மிகச் சாதாரண விஷயங்களில் ஒன்றாகிவிட்டது.
 
நிலாவில் கால் பதிச்சு 50 வருஷம் ஆய்டுச்சு…!!!

பூமியின் துணை கிரகமான சந்திரனில் மனிதன் வாழ்வதற்கான சூழ்நிலைகள் இல்லை என்பது ஓரளவு தெளிவான பின்னரும், சந்திரனில் ஆய்வு நடத்த பல்வேறு நிறுவனங்களும் போட்டியிட்டு வருகின்றன.

அந்த வகையில் ரஷியாவும், அமெரிக்காவும் விண்வெளி ஆராய்ச்சியில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல் ஆராய்ச்சி செய்து வந்தனர்.

அதிலும் சந்திரனுக்கு யார் ஆளை அனுப்பப் போகிறார்கள் என்பதில் பல ஆண்டுகளாக கடும் போட்டி நிலவியது.

இப்போதைய கால கட்டத்திற்கு வேண்டுமானால் விண்வெளிக்குச் செல்வதெல்லாம் மிகச் சாதாரண விஷயங்களில் ஒன்றாகிவிட்டது. ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்னர் இது பலருக்கும் ஒரு கனவாகவே இருந்தது.

முதன் முதலாக பூமியைச் சுற்றி ஸ்புட்னிக்’ என்னும் விண்வெளிக் கப்பல் 1957 ஆம் ஆண்டு விடப்பட்டது.

நிலாவில் கால் பதிச்சு 50 வருஷம் ஆய்டுச்சு…!!!

அடுத்து 1961 ஆம் ஆண்டு ககாரின் என்ற வீரரை ராக்கெட்டில் பூமியைச் சுற்றி வர செய்தது ரஷ்யா. அடுத்து ஷெப்பர்டு என்ற வீரரை ராக்கெட்டில் பூமியைச் சுற்றிவர செய்தது அமெரிக்கா.

இந்த முயற்சிகளுக்கு இடையே நீல் ஆர்ம்ஸ்டிராங் 1969 ஜூலை 15 ஆம் நாள் நிலவில் கால் பதித்தார். ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் ஆகியோர் சந்திரனில் தரையிறங்கி அமெரிக்க நாட்டுக் கொடியினை நிலைநாட்டியதுடன் அங்கிருந்து கற்கள் மற்றும் மணலை சேகரித்துக் கொண்டு கிளம்பினர்.

இந்தச் சம்பவம் சமீபத்தில் நடைபெற்றதுபோன்று தோன்றினாலும், இது நடைபெற்று 50 ஆண்டுகள் ஆகிவிட்டது.

From around the web