டெல்லியில் பயங்கர வன்முறை: 5 பேர் பலியால் பரபரப்பு

டெல்லியில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் திடீரென வன்முறை ஏற்பட்டு 5 பேர் பலியாகி உள்ளனர். இதில் ஒரு போலீஸ்காரரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 3 போலீஸ் உயர் அதிகாரிகள் இந்த கலவரத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த வன்முறையின் போது சிவப்பு நிற டீசர்ட் அணிந்த ஒருவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக
 
டெல்லியில் பயங்கர வன்முறை: 5 பேர் பலியால் பரபரப்பு

டெல்லியில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் திடீரென வன்முறை ஏற்பட்டு 5 பேர் பலியாகி உள்ளனர். இதில் ஒரு போலீஸ்காரரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 3 போலீஸ் உயர் அதிகாரிகள் இந்த கலவரத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்த வன்முறையின் போது சிவப்பு நிற டீசர்ட் அணிந்த ஒருவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதாகவும், அந்த நபர் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது

நேற்று நடைபெற்ற எதிர்ப்பு போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் போலீஸ், பள்ளி வாகனங்கள் மற்றும் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கியது பெரும் துரதிருஷ்டவசமானது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டெல்லிக்கு வருகை தந்திருக்கும் நிலையில் இந்தப் போராட்டம் ஏற்பட்டதும் இந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என கருதப்படுகிறது

From around the web