அலேக்காக தூக்கப்பட்ட 5 மாடி கட்டடம்: பரபரப்பு தகவல்

 

கடந்த சில வருடங்களாக கட்டிடங்களை ஒரு இடத்திலிருந்து அப்படியே தூக்கி மற்றொரு இடத்தில் வைக்கும் நிகழ்வுகள் உலகின் பல நாடுகளில் நடந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சீனாவில் 85 ஆண்டுகள் பழமையான கட்டிடம் ஒன்றை அந்த ஒரு இடத்தில் இருந்து தூக்கி இன்னொரு இடத்தில் வைத்துள்ள பொறியியல் அதிசயம் பெரும் சாதனையாக கருதப்படுகிறது 

சீனாவில் 85 ஆண்டுகள் பழமையான ஆரம்பப்பள்ளி ஒன்று ஐந்து மாடி கட்டடத்தில் இயங்கி வந்தது. இந்த நிலையில் வாக்கிங்மெஷின் என்ற புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த கட்டடத்தை இடமாற்றம் செய்ய பொறியியல் அறிஞர்கள் முடிவு செய்தனர் 

இதனை அடுத்து இந்த புதிய தொழில்நுட்பத்தை மூலம் இந்த ஐந்து மாடி கட்டிடத்தை அப்படியே அலேக்காக தூக்கி வேறொரு இடத்தில் வைத்து சாதனை புரிந்தனர். இந்த சாதனை குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

85 ஆண்டு பழமையான ஐந்து மாடிக் கட்டடத்தை தூக்கி வைத்தது பொறியியல் துறையில் பெரும் சாதனை என்றே உலகம் முழுவதும் கருதப்படுகிறது

From around the web