5 மணிக்கு ஆலோசனை: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம்!

 
modi

பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவிருப்பதை அடுத்து இரவு 7 மணிக்கு அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற இருப்பதாக சற்றுமுன் தகவல்கள் வெளிவந்துள்ளன

நிர்வாக வசதிக்காக மத்திய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது என்பதும் கூடுதலாக 43 அமைச்சர்கள் இடம் பெற்றார்கள் என்பது தெரிந்ததே. அதில் தமிழகத்தைச் சேர்ந்த எல் முருகன் அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது 

நேற்று மாலை மத்திய அமைச்சர்கள் அனைவரும் பதவி ஏற்றுக் கொண்டதை அடுத்து புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள் மற்றும் புதிய அமைச்சகங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்த கூட்டம் முடிந்தவுடன் இரவு 7 மணிக்கு அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டம் மற்றும் அமைச்சர்கள் குழு கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகளை பிரதமர் மோடி வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web