இந்தியாவில் அக்டோபர் மாதத்திற்குள் மேலும் 5 கொரோனா தடுப்பூசிகள்!

இந்தியாவில் அக்டோபர் மாதத்திற்குள் கொரோனா எதிரான மேலும் ஐந்து தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வரும் என மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்!
 
இந்தியாவில் அக்டோபர் மாதத்திற்குள் மேலும் 5 கொரோனா தடுப்பூசிகள்!

மக்கள் மத்தியில் உயிரை குடிக்கும் ஆட்கொல்லி என்றால் அனைவரும் கூறுவது ஒரே பதில் தான் அந்த பதிலானது கொரோனா வைரஸ்.இந்த கொரோனா வைரஸ் தாக்கம் முதலில் சீன நாட்டில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலக நாடுகள் அனைத்திலும் இந்த கொரோனா தாக்கம்  பரவியது. மேலும் கடந்த ஆண்டின் தொடக்கத்திலும் இந்தியாவிலும் இந்த கொரோனாநோயின் தாக்கம் ஆனது அதிகமாக பரவ தொடங்கியது. ஆனால் இந்திய அரசானது எந்த அரசும் கடைபிடிக்காத முயற்சிக்காத முழு ஊரடங்கு திட்டத்தினை அமல்படுத்தியது.

covid 19

இதனால் கடந்த ஆண்டின் இறுதியில் கொரோனா தாக்கமானது குறை..மேலும் இந்திய அரசிற்கு பல்வேறு நாடுகள் தரப்பில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஆனால் சில தினங்களாக இந்தியாவில் தொடர் சோகம் அதிகரிக்கிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் குறிப்பாக டெல்லி ,மும்பை, சென்னை போன்ற மாநகரங்களில் கொரோனா நோயின் தாக்கம் ஆனது தலைவிரித்தாடுகிறது. மேலும் இந்தியாவின் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது மத்திய அரசு வட்டாரங்கள் மத்தியில் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி இந்தியாவில் அக்டோபர் மாதத்திற்குள் மேலும் 5 கொரோனா தடுப்பூசிகள் நடைமுறைக்கு வரும் என்று தகவல் கசிந்துள்ளது. மேலும் இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு மற்றும்  கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் இந்தியாவில் ஜூன் மாதத்தில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியும், ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி ஆகஸ்ட் மாதத்திலும் வரும். மேலும் ஆகஸ்ட் மாதத்தில் ஜைடஸ் காடிலா தடுப்பூசியும் வரும் என்று தகவல் கசிந்துள்ளது .மேலும் நோவாக்ஸ் தடுப்பூசி செப்டம்பரில், நாசல் தடுப்பூசி அக்டோபரில் பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவல் கசிந்துள்ளது.

From around the web