5 லட்சம் கிரெடிட் கார்டு கடன்: நோட்டீஸ் அனுப்பிய வங்கியால் வாலிபர் தூக்கில் தொங்கி தற்கொலை

 

கிரெடிட் கார்டில் வாங்கிய ஐந்து லட்ச ரூபாயை உடனடியாக கட்டுமாறு வங்கி நோட்டீஸ் அனுப்பியதால் மன உளைச்சல் ஏற்பட்டுத் சென்னை வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கடந்த சில ஆண்டுகளாக வங்கிகள் கிரெடிட் கார்டுகளை பெருமளவு விநியோகம் செய்து கொண்டிருக்கிறது என்பதும் பொதுமக்களை செலவு செய்ய ஆசையை தூண்டி அதன் பின்னர் அவர்களை சிக்கலில் ஆழ்த்தி வருகிறது என்பதும் தெரிந்ததே 

ஏகப்பட்ட இளைஞர்கள் கிரெடிட் கார்டால் பெரும் சிக்கலில் கடனில் உள்ளனர் என்பதும் தேவையில்லாத செலவுகளை செய்து அதன்பின் தேவைப்படும் பொருட்களை வாங்க முடியாமலும் கையில் காசில்லாமலும், கிரெடிட் கார்டு கடனை கட்ட முடியாமலும் தவித்து வருகின்றனர் 

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த மகேஷ் குமார் என்ற 24 வயது இளைஞர் இரண்டு வங்கிகளில் ரூபாய் ஐந்து லட்ச ரூபாய் கிரெடிட் கார்ட் கடன் வாங்கி செலவு செய்துள்ளார். கடந்த 5 மாதங்களாக அவர் கிரெடிட் கார்டு பணத்தை செலுத்தாத நிலையில் உடனடியாக 5 லட்ச ரூபாயும் கட்டுமாறு வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்தது

இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஷ்குமார் தனது தந்தையிடம் பணத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறி உள்ளார். ஆனால் தந்தையிடம் அவ்வளவு பெரிய தொகையை இல்லாததால் மன உளைச்சலுக்கு ஆளான மகேஷ்குமார் திடீரென தனது அறையில் மின் விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் 
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

From around the web