திமுகவில் 5 துணை பொதுச்செயலாளர்கள்: ஆ. ராசா கனிமொழிக்கு வாய்ப்பு கிடைக்குமா?

சமீபத்தில் திமுக பொதுச் செயலாளர் தேர்தல் மற்றும் பொருளாளர் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் மட்டும் விண்ணப்பம் செய்தார்
 

சமீபத்தில் திமுக பொதுச் செயலாளர் தேர்தல் மற்றும் பொருளாளர் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் மட்டும் விண்ணப்பம் செய்தார். அதேபோல் பொருளாளர் பதவிக்கு டிஆர் பாலு மட்டுமே விண்ணப்பம் செய்தார். இதனையடுத்து இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது 

இந்த நிலையில் தற்போது திமுக துணைப் பொதுச்செயலாளராக ஐவரை தேர்வு செய்ய திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்படும் என தெரிகிறது 
இந்த நிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளராக யார் யாரெல்லாம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறித்த தகவல் திமுக வட்டாரங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. ஆ. ராசா கனிமொழி மற்றும் பொன்முடி ஆகிய மூவரும் துணை பொதுச் செயலாளர்களாக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 

மேலும் இரு முக்கிய தலைவர்கள் பெயரும் துணை பொதுச்செயலாளர் பதவிக்கு அடிபடுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் திமுக தலைமை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

From around the web