இதுவரை தமிழகத்தில் 5.7 கோடி அபராத தொகை வசூல்!சென்னையில் இதுவரை 9.74 லட்சம் ரூபாய்!

இதுவரை தமிழகத்தில் மாஸ்க் போடாதவர்கள் இடம் 5.7 கோடி ரூபாய் அபராத தொகையாக வசூலிக்க பட்டதாக தகவல்!
 
இதுவரை தமிழகத்தில் 5.7 கோடி அபராத தொகை வசூல்!சென்னையில் இதுவரை 9.74 லட்சம் ரூபாய்!

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலைமை மாறி எங்கும் கொரோனா எதிலும் கொரோனா  என்ற நிலைமைக்கு தற்போது உலகம் முழுவதும் தள்ளப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது, இந்த ஆட்கொல்லி நோயான கொரோனா சீனாவில் உள்ள ஒரு மாகாணத்தில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் சீனா முழுவதும் கொரோனா நோயின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் சீனாவின் பலி எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து உலக நாடுகள் அனைத்திலும் இந்த நோயின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

radha krishanan

இதனால்உலக மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்துடன் இருந்தனர். மேலும் இந்தியாவில் கொரோனா நோயின் தாக்கம் கண்டறியப்பட்டது. ஆனால் இந்திய அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்தி கடந்த ஆண்டின் இறுதிக்குள் இந்நோயின் தாக்கத்தை குறைத்து விட்டனர். சில தினங்களாக தமிழகத்தில் இந்நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசானது சில தினங்களுக்கு முன்பு சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதன்படி பொது இடங்களில் செல்பவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் எனவும் கூறி ,

இந்நிலையில் தற்போது முகக் கவசம் அணியாதவர்கள் இடம் அபராத தொகையும் வசூலிக்கப்படுகிறது. இதன்படி தமிழகத்தில் இதுவரை மாஸ்க் போடாதவர்கள் 2.39 லட்சம் பேரிடம் அபராதத் தொகை வசூலிக்க பட்டதாகவும் , மேலும் அவர்களிடம் 5.7 கோடி ரூபாய் வசூலிக்க பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை போரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். மேலும் சென்னையில் மாஸ்க் அணியாதவர்களிடம் இருந்து இதுவரை 9.74 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்க பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும் நேற்று ஒரே நாளில் 1284 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2.56 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது கூறப்படுகிறது.

From around the web