தாத்தாவுடன் பைக்கில் சென்ற 4 வயது சிறுவன் விபத்தில் மரணம்: சென்னையில் பரபரப்பு 

சென்னையில் கடந்த சில நாட்களாக ஊரடங்கில் தளர்வுகள் ஏற்பட்டதன் காரணமாக போக்குவரத்து வழக்கம்போல் பிசியாகி விட்டது என்பதும், பல இடங்களில் டிராபிக் அதிகமாக உள்ளது என்பதும் வாகனங்கள் மின்னல் வேகத்தில் சென்று கொண்டு இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று காலை தண்ணீர் லாரி மோதி 4 வயது சிறுவன் பலியாகி இருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை நான்கு வயது சிறுவன் தனது தாத்தாவுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த போது அந்த பகுதியில் தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி ஒன்று பைக் மீது மோதியது

இதனால் ஏற்பட்ட விபத்தில் தாத்தா படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். நான்கு வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறுவனின் தாத்தா மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தண்ணீர் லாரி டிரைவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் 

From around the web