4வது இடத்தில் இருந்து 11வது இடம்: முகேஷ் அம்பானியின் பின்னடைவுக்கு காரணம் என்ன?

 

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலக பணக்காரர் பட்டியலில் பத்தாவது இடத்திற்குள் இடம் பெற்றார் என்பது தெரிந்ததே 

அதன்பின் 8வது இடம், ஆறாவது இடம் என படிப்படியாக முன்னேறி ஒருகட்டத்தில் நான்காவது இடத்திற்கு அவர் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அவர் உலகப் பணக்காரர்களில் முதல் இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் தற்போது 11வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் 

ambani

உலக பணக்காரர் பட்டியலில் 4வது இடம் வரை முன்னேறிய தொழில் அதிபர் முகேஷ் அம்பானி தற்போது 11வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவருடைய சொத்து மதிப்பு 6.62 லட்சம் கோடியாக இருந்த நிலையில் தற்போது அவருடைய சொத்து மதிப்பு வெறும் 5.6 லட்சம் கோடியாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது

அவருடைய நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் குறைந்ததை அடுத்து அவருக்கு இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விரைவில் அவருடைய நிறுவனங்களின் பங்குகள் அதிகமாகும் என்றும் உலக பணக்காரர் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் அவர் இடம் பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

From around the web