49 முதல் 59 வயது 13% தடுப்பூசி;60 வயதுக்கு மேல் 18%: தமிழக அரசு!

தமிழகத்தில் 49வது முதல் 59 வயதுவரை உள்ளவர்கள் 13 சதவீதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது!
 
49 முதல் 59 வயது 13% தடுப்பூசி;60 வயதுக்கு மேல் 18%: தமிழக அரசு!

உலகமே தற்போது ஒரு கண்ணுக்கு தெரியாத கிருமிகள் மிகவும் போரடுக்கிறது. இந்த கண்ணுக்கு தெரியாத கிருமியை கொரோனா என்றழைக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் மேலும் இந்தியா கடந்த ஆண்டில் கட்டுப்படுத்தியது. எனினும் தற்போது இந்தியாவில் இந்நோயின் தாக்கம் மீண்டும் இரண்டாவது அலையாக எழுந்து மக்களுக்கு மிகப்பெரிய இன்னல்களையும் துன்பத்தையும் கொடுக்கிறது. மேலும் இந்த இரண்டாவது அலை மார்ச் மாதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் டெல்லி மும்பை சென்னை போன்ற மாநகரங்களில் இந்நோயின் தாக்கம் ஆனது ஆயிரக்கணக்கில் புதிதுபுதிதாக உருவாகிறது தினந்தோறும் கண்டறியப்படுகிறது.

corona

மேலும் மத்திய அரசின் சார்பில் கொரோனா தடுப்பூசிகள் அனைத்தும் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டன. எனினும் ஒரு சில பகுதிகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். மேலும் மத்திய அரசானது 45 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தினம்தோறும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சார்பில் தற்போது மே 1ஆம் தேதி முதல் இலவச தடுப்பூசி முகாம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு தடுப்பூசி விவரங்களையும் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 45 வயது முதல் 59 வயதுவரை 13 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தமிழக அரசு கூறியுள்ளது. மேலும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 18 சதவீதம் பேருக்கு இந்த கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தமிழகத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

From around the web