சென்னையில் 450 கிலோ தங்கம் சிக்கியது!தேர்தல் பறக்கும் படையினர் மீண்டும் ஒப்படைப்பு!

சென்னை அண்ணாசாலை சிக்னலில் 450 கிலோ தங்கம் சிக்கியது!
 

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இன்னும் 24 மணி நேரம் கூட இல்லாததால் தேர்தல் வேலைகளில் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் அனுப்பப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தேர்தல் ஆணையம்  பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

election

தலைமைத் தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாகு உள்ளார். அவர் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து  கூறினார். இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன பரிசோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல இடங்களில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் தங்க நகைகளையும், பணத்தையும், பொருட்களையும் கைப்பற்றி வருகின்றனர். இந்நிலையில் தற்போது தேர்தல் பறக்கும் படையினர் சென்னையில் 450 கிலோ எடை மதிப்பிலான தங்கத்தை கைப்பற்றினர்.

மேலும் இந்த 450கிலோ தங்கமானது சென்னை அண்ணா சாலை சிக்னலில் பறக்கும் படையினர் சோதனையில் சிக்கியது. மேலும் இந்த 450 கிலோ தங்கமானது தியாகராய நகரிலிருந்து சவுகார்பேட்டை கொண்டு செல்லப்பட்டபோது சிக்கியது.மேலும் இதில் தங்கம் மட்டுமின்றி வெள்ளியும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கொண்டு சென்றவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்ததால் தங்கம், வெள்ளிப் பொருள்களை மீண்டும் ஒப்படைத்தது தேர்தல் பறக்கும் படையினர். மேலும் இது போன்ற தமிழகத்தின் பல பகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர பரிசோதனையில் உள்ளனர்.

From around the web