நாளை முதல் தமிழகத்தில் 4400 தனியார் பேருந்துகள் இயங்கும்…

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் ஒருபுறம் உயர்கின்றது, மற்றொருபுறம் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஊரடங்கானது பல கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகத்தினைப் பொறுத்தவரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் குறித்து ஏற்கனவே அறிக்கை வெளியான நிலையில் அரசுப் போக்குவரத்து சேவைகளும் இயங்கத் துவங்கியுள்ளன. அதன்படி பேருந்து சேவையானது காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும். மேலும்
 
நாளை முதல் தமிழகத்தில் 4400 தனியார் பேருந்துகள் இயங்கும்…

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் ஒருபுறம் உயர்கின்றது, மற்றொருபுறம் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஊரடங்கானது பல கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகத்தினைப் பொறுத்தவரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற  மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

மற்ற இடங்களில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் குறித்து ஏற்கனவே அறிக்கை வெளியான நிலையில் அரசுப் போக்குவரத்து சேவைகளும் இயங்கத் துவங்கியுள்ளன.

நாளை முதல் தமிழகத்தில் 4400 தனியார் பேருந்துகள் இயங்கும்…

அதன்படி பேருந்து சேவையானது காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும். மேலும் அதன்பின்னர் கொரோனாவின் பாதிப்பு குறித்த முடிவுகள் அடிப்படையில் படிப்படியாக பேருந்துகளின் எண்ணிக்கையினை அதிகரிப்போம் என்றும் கூறி இருந்தது.

ஆனால் அரசுப் பேருந்துகள் இயங்கியபோதும், தனியார் பேருந்துகள் சேவையானது இயங்கவில்லை. ஆனால் தற்போது தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தனியார் பேருந்து சேவைகளை இயக்குவது குறித்து ஆலோசித்துள்ளது. இந்தக் கூட்டத்தின்படி தனியார் பேருந்துகளை நாளை முதல் இயக்க முடிவு எடுத்துள்ளது.

இதுகுறித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க செயலாளர் கூறுகையில், “நாளை முதல் தனியார் பேருந்துகள் தக்க பாதுகாப்பு வழிமுறைகளுடன் ஓடும், அதன்படி தமிழ்நாடு முழுவதும் 4400 தனியார் பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

From around the web