பதறும் தமிழகம்! எகிறும் பலி!ஒரே நாளில் 44 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 44 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை கூறியுள்ளது!
 
பதறும் தமிழகம்! எகிறும் பலி!ஒரே நாளில் 44 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் ஆட்கொல்லி நோயாக தற்போது வந்துள்ளது கொரோனா நோய். இந்நோயானது முதன் முதலில் இந்தியாவின் நட்பு நாடான சீனாவில் கண்டறியப்பட்டு அதன் பின்னர் சீனா முழுவதும் பரவியது. அங்கிருந்து ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இந்நோயானது பரவியதாக தகவல் வெளியாகின. மேலும் இந்தியாவிலும் கொரோனா நோயானது கடந்த ஆண்டின் தொடக்கத்தில் பரவ தொடங்கியது. அதன் பின்னர் இந்தியாவின் பெரும் முயற்சியினால் கடந்த ஆண்டின் இறுதிக்குள் கொரோனா நோயானது இந்தியாவில்  கட்டுப்படுத்தப்பட்டது.

corona

இந்நிலையில் இந்நோயின் தாக்கம் ஆனது மீண்டும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் மிகுந்த மனவருத்தத்தில் சோகத்தில் உள்ளனர். மேலும் இதற்காக பல மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளன. நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ளன. மேலும் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவிலும் நாளை முதல் ஊரடங்கு அமல் படுத்த உள்ளதாக அம்மாநில அரசு சார்பில் சில மணி நேரத்திற்கு முன்பு தகவல் வெளியானது. தமிழகத்தில் சென்னை மதுரை கோயம்புத்தூர் செங்கல்பட்டு போன்ற  மாவட்டங்களில் கொரோனா தீவிரமாகப் பரவுகிறது.

 மாவட்ட ஆட்சியர்கள் பல்வேறு விதிமுறைகளையும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். மேலும் மக்களிடம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் விழிப்புணர்வும் நடத்துகின்றனர்.  ஆட்கொல்லி நோயான கொரோனாவினால் தமிழகத்தில் 24 மணி நேரத்திற்கு 44 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை தகவல். மேலும் தமிழகத்தில் இதுவரை இந்த ஆட்கொல்லி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 157 ஆக அதிகரித்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. இதுபோன்று தமிழகத்தை தொடர்ந்து இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்நோயினால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகுந்த சோகத்தை அளிக்கிறது.

From around the web