40000அடுக்குமாடி வீடுகள்! 20,000 தனி வீடுகள் வழங்க நடவடிக்கை!

சென்னை மேற்கு மாம்பலத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஓபிஎஸ் தேர்தல் பரப்புரை!
 
40000அடுக்குமாடி வீடுகள்! 20,000 தனி வீடுகள் வழங்க நடவடிக்கை!

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தின் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி உள்ளன. மேலும் ஆளும் கட்சியான அதிமுக  கூட்டணியாக பாஜகவை வைத்துள்ளது. மேலும் எதிர்கட்சியான திமுக கட்சி தன்னுடன் கூட்டணியாக காங்கிரஸ் கட்சியும் மதிமுக கட்சியும் வைத்துள்ளது.  எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட உள்ளதாகவும் அதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளார்.

admk

மேலும் எதிர்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவையும் அவர் தாக்கல் செய்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தில் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் தனது தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

அவர் தற்போது சென்னையில் உள்ள மேற்கு மாம்பலத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். மேலும் அவர் சென்னையில் 40 ஆயிரம் அடுக்குமாடி வீடுகள் 20,000 தனி வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். மேலும் 2011,2016ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக அரசு முழுமையாக நிறைவேற்றியதாக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரையில் கூறினார்.

From around the web