40 தொகுதிகளிலும் தனித்து போட்டி: கமல் அறிவிப்பு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி, திமுக-காங்கிரஸ் கூட்டணி மற்றும் அமமுக கூட்டணி என மும்முனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது நான்குமுனை போட்டி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்த கமல்ஹாசன் தற்போது வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் தேமுதிக, பாமக, சரத்குமார்
 

40 தொகுதிகளிலும் தனித்து போட்டி: கமல் அறிவிப்பு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி, திமுக-காங்கிரஸ் கூட்டணி மற்றும் அமமுக கூட்டணி என மும்முனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது நான்குமுனை போட்டி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்த கமல்ஹாசன் தற்போது வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் தேமுதிக, பாமக, சரத்குமார் கட்சி, வாசனின் தமாக ஆகிய கட்சிகள் எந்த கூட்டணியில் இடம்பெறும் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை என்பதால் ஐந்துமுனை போட்டி வருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

From around the web