இந்திய, சீன மோதலில் சீனாவில் பலி எண்ணிக்கை எவ்வளவு? அதிர்ச்சி தகவல்

லடாக்கில் உள்ள கல்வான் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு இந்திய மற்றும் சீன ராணுவம் இடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் வீரமரணம் அடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது ஆனால் அதே நேரத்தில் சீனர்கள் தரப்பில் 43 சீன வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் சீன ராணுவம் மற்றும் சீன அரசு இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் தெரிவிக்கவில்லைசண்டை முடிந்த ஒரு சில மணி நேரத்திற்குள் சீன ராணுவத்தின் ஹெலிகாப்டர்கள் இந்திய
 

இந்திய, சீன மோதலில் சீனாவில் பலி எண்ணிக்கை எவ்வளவு? அதிர்ச்சி தகவல்

லடாக்கில் உள்ள கல்வான் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு இந்திய மற்றும் சீன ராணுவம் இடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் வீரமரணம் அடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது

ஆனால் அதே நேரத்தில் சீனர்கள் தரப்பில் 43 சீன வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் சீன ராணுவம் மற்றும் சீன அரசு இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் தெரிவிக்கவில்லை
சண்டை முடிந்த ஒரு சில மணி நேரத்திற்குள் சீன ராணுவத்தின் ஹெலிகாப்டர்கள் இந்திய எல்லைக்குள் வந்து பலியான சீன ராணுவ வீரர்களின் உடல்களை எடுத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரே நேரத்தில் பல ஹெலிகாப்டர்கள் உடல்களை எடுத்துச் சென்றுள்ளதால் சீனாவில் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது

ஆனால் சீனா இந்த பலி எண்ணிக்கை குறித்து எந்தவித தகவலும் தெரிவிக்காமல் மௌனமாக இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இந்திய ஊடகங்களின் கணிப்பின்படி சீன வீரர்கள் 43 பேர் பலியாகியுள்ளதாகவும் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தால் மட்டுமே உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web