பிரியங்கா கொலையாளிகள் 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக் கொலை..! தப்பிச்செல்ல முயற்சியா?

தெலங்கானாவில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலையான சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரும் சற்றுமுன் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். போலீஸ் காவலில் இருந்து தப்ப முயன்ற போது சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த 26 வயது கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கடந்த 27ம் தேதி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த கொலையாளிகளை சுட்டுக்கொல்ல வேண்டும் என நாடு
 

பிரியங்கா கொலையாளிகள் 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக் கொலை..! தப்பிச்செல்ல முயற்சியா?

தெலங்கானாவில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலையான சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரும் சற்றுமுன் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். போலீஸ் காவலில் இருந்து தப்ப முயன்ற போது சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த 26 வயது கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கடந்த 27ம் தேதி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இந்த கொலையாளிகளை சுட்டுக்கொல்ல வேண்டும் என நாடு முழுவதும் ஆவேசக்குரல் எழுந்தது. பாராளுமன்றத்திலும் இதுகுறித்து பெண் எம்பிக்கள் ஆவேசமாக தங்கள் கருத்தை தெரிவித்தனர்.

இந்த நிலையில் சற்று முன்னர் கொலையாளிகள் 4 பேர்களும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தபோது திடீரென 4 பேர்களும் தப்பிச் செல்ல முயன்றதாகவும் இதனையடுத்து போலீசார் அவர்கள் நால்வரையும் துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

From around the web