இன்னைக்கு 5 மணிக்கு "4.20 லட்சம்" தடுப்பூசிகள் "சென்னை" வருகை!!!

4.20 லட்சம் கோவிஷீல்டு  தடுப்பூசி சென்னை வருவதாக தகவல் கிடைக்கிறது!
 
covishield

தற்போதைய நம் இந்தியாவில் உள்ள மருத்துவமனைகள் அனைத்திலும் நோயாளிகள் நிறைந்து காணப்படுகின்றனர். காரணம் என்னவெனில் நம் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் அவை காரணமாக தற்போது உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் இரண்டிலும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். இந் நிலையில் சில தினங்களாக இந்தியாவில் இந்த கொரோனா நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவது மக்களுக்கு மிகுந்த சந்தோசத்தை உருவாக்குகிறது,covidsheid

மேலும் இந்தியாவில் இரண்டு விதமான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவைகள் பெரும்பாலான மருத்துவமனைகளில் செலுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் தற்போது கோவிஷீல்டு தடுப்பூசியின் பற்றாக்குறை அதிகமாக நிலவுகிறது. இத்தகைய பற்றாக்குறையிலும் நம் தமிழகத்திற்கு இன்று இந்த கோவிஷீல்டு  தடுப்பூசி வருவதாக கூறப்படுகிறது.

அதன்படி தமிழகத்தில் இன்று 4.20 லட்சம் மதிப்பிலான கோவிஷீல்டு  தடுப்பூசிகள் வருகை உள்ளது. மேலும் அதன்படி 4 லட்சத்து 20 ஆயிரத்து 570 கோவிஷீல்டு  தடுப்பூசிகள் இன்று மாலை 5 மணிக்கு சென்னைக்கு வர வைக்கிறது என்று மருத்துவத் துறை சார்பில் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த பயனடைவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது மேலும் தற்போதுள்ள காலகட்டத்தில் நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

From around the web