"டவ் தே புயல்" வீட்டின் மேற்கூரை இடிந்து சிறுமி-பலி 4 லட்சம் நிவாரணம்!

குமரி மாவட்டத்தில் ராமன் துறையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பலியானோரின் குடும்பத்துக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரண தொகையாக வழங்கப்பட்டுள்ளது!
 
"டவ் தே புயல்" வீட்டின் மேற்கூரை இடிந்து சிறுமி-பலி 4 லட்சம் நிவாரணம்!

தற்போது அரபிக் கடலில் டவ் தே என்ற புயல் வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடை மழையும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றன. குறிப்பாக தேனி திண்டுக்கல் நீலகிரி மாவட்டங்களில் பல பகுதிகளில் அடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை பெய்யும் மாவட்டங்களில் வாழும் மக்கள் மிகுந்த அச்சத்தோடு உள்ளனர். காரணம் என்னவெனில் இந்த மழையானது தீவிரமாக பெய்வதால் மழைநீர் ஊருக்குள் சென்று மக்களின் வீடுகளை பாதிக்கிறது.radha krishnan

மேலும் பல பகுதிகளில் சாலைகளில் மழை வெள்ளம்போல் ஓடுகிறது. மேலும் நேற்றைய தினம் ராமேஸ்வரம் பகுதியில் கடல் உள்வாங்கியது அப்பகுதியில் உள்ள மீனவர்களையும் மக்களையும் மிகுந்த அச்சத்தில் கொடுத்தது. இந்நிலையில் முக்கடல் சந்திக்கும் பூமியான கன்னியாகுமரியிலும் இந்த மழை கொட்டுகிறது. மேலும் அங்கு பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து வீடுகளை பாதிக்கிறது.இந்நிலையில் இந்த அடை மழை காரணமாக மேற்கூரை விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் ராமன் துறையில் உள்ள வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சிறுமி உயிரிழந்துள்ளார்.  தொடர்ந்து அந்த சிறுமி குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிவாரண நிதியை மீன்வளத்துறை அமைச்சராக தற்போது உள்ள அனிதா ராதாகிருஷ்ணன் சிறுமியின் குடும்பத்துக்கு வழங்கினார். மேலும் அந்த சிறுமியின் பெயர் ரெஜினா என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web